நான் உன்னை நினைக்கிறேன் என்பதை
நான் உனக்கு சொல்லிக்கொண்டே இருப்பேன்
நீ உண்பதைப்பற்றி
நீ உறங்குவதைப் பறறி
நானாகத்தான் உன்னைக் கேட்டுக்கொண்டிருப்பேன்
நீ அதை விரும்பாத நேரங்களிலும்கூட
நீயாக என்னை நினைக்கிறாயா என
ஒருபோதும் நினைக்கமாட்டேன்
அதை சோதித்துப் பார்க்கவும் மாட்டேன்
ஒரு முறை உன்னிடம்
என்னை நீ நினைக்கிறாயா
எனக் கேட்டுவிட்டு
பிறகு யாருமற்ற வெட்ட வெளியில்
நிராதரவாய் நின்றுகொண்டிருந்தேன்
3.7.2022
மாலை 6.18
மனுஷ்ய புத்திரன்