யாருக்காக வாழவிரும்பினோமா
அவர்களைத்தவிர
எல்லோருக்குமாகவும்
வாழ்வதுதான் இந்த வாழ்க்கை
யாருக்காக
காத்திருந்தோமோ
அவர்களைத் தவிர
எல்லோரும் ரயிலில் இருந்து இறங்கி
கூட்டமாக ஸ்டேஷனைவிட்டு
வந்துகொண்டிருக்கிறார்கள்
3.7.2022
காலை 11.21
மனுஷ்ய புத்திரன்