தங்கம்

தங்கமே என்று
நான் உன்னை அழைத்தால்
நீ அந்தச் சொல்லால்
இன்னொருவரை அழைக்கக் கூடாது
மாற்றுக் குறைந்துவிடும்
தங்கம் என்பது
வெறும் சொல் அல்ல
வேண்டும் என்றால்
அதை எடைபோட்டுப் பார்
தெரியும்
8.7.2022
பகல் 12.38
மனுஷ்ய புத்திரன்

link