கல்லறைத் தூக்கம்

அணைத்துக்கொள்ளப்படாத மனிதன்
கல்லறையில் தூங்குவதுபோலத்தான்
தூங்குகிறேன்
ஒரு சின்ன வித்தியாசம்
கல்லறையைவிட
இங்கே கொஞ்சம்
காற்றோட்டமாக இருக்கிறது
மற்றபடி
இந்த இரவை அணைத்துக்கொள்கிறேன்
இந்த இருளை அணைத்துக்கொள்கிறேன்
இந்தத் தலையணையை அணைத்துக்கொள்கிறேன்
இந்தக் காற்றை அணைத்துகொள்கிறேன்
என்னையே நான் அணைத்துக்கொள்கிறேன்
7.7.2022
இரவு 11.41
மனுஷ்ய புத்திரன்