எங்கே எங்கே

உன்னைப் பின்தொடரவில்லை
உன்னைக் கண்காணிக்கவில்லை
‘ எங்கே ..எங்கே’ என பரிதவித்துப்போகிறேன்
என்பதைதவிர வேறு எதுவும் இல்லை
இதை உனக்கு புரியவைக்க முடியும்
என நம்பிக்கை இல்லை
ஒருவேளை நீ புரிந்து கொள்ளக்கூடும்
உன்னைத் தேட யாருமற்ற ஒரு காலத்தில்
7.7.2022
மாலை 5.10
மனுஷ்ய புத்திரன்