அன்பை அளக்கும் கருவி

ஒரு நீண்ட இரவுக்குப்பின்
காலையில் முதல் வணக்கத்தை
இருவரில் முதலில் யார் சொல்கிறார்களோ,
ஒரு நீண்ட பகலின் முடிவில்
‘ இந்த நாள் எப்படிப் போனது?’ என
இருவரில் முதலில் யார் கேட்கிறார்களோ
அவர்களின் பிரியம்தான்
மற்றவரைவிட
சற்றே உயரமானது
அல்லது
சற்றே ஆழமானது என
நான் புரிந்துகொள்ளவேண்டுமா?
அன்பை அளக்க
இந்த உலகில் எனக்கு
வேறு கருவிகளே இல்லை
7.7.2022
காலை 10.45
மனுஷ்ய புத்திரன்