நம் இருவரின் மெசஞ்சரிலும்
பச்சை விளக்கு எரிகிறது
இருவரின் வாட்ஸப்பிலும்
ஆன்லைன் காட்டுகிறது
நிம்மதியாக இருக்கிறது
இரவெல்லாம்
எல்லோரும் இப்படித்தான் இருக்கிறோம்
பொழுது விடிந்தது
யாம் செய்த தவத்தால்
பயப்படாதே
ஒன்றும் ஆகாது
இன்னும் இருக்கிறது நமக்கு
இதைவிடவும் யுத்தக் காலங்கள்
நிம்மதியாக இருப்போம்
என்று தெரியும்
எப்போது என்று தெரியாது
1.5.2021
காலை