ஹாட்டீன்

ஒரு ‘ குட்மார்னிங்’ மேல்
ஒரு ஹாட்டீன் பறக்கிறது
அதற்கு மறுமொழியாய்
அதன் மேல் பதில் ஹாட்டீன்
பதில் ஹாட்டீன் மேல்
இன்னொரு பிரிய ஹாட்டீன்
பிரிய ஹாட்டீன்மேல்
இன்னும் பிரிய ஹாட்டீன்
அதன் மேல் சிவப்பு ஹாட்டீன்
சிவப்பு ஹாட்டீன்மேல் வெள்ளை ஹாட்டீன்
வெள்ளை ஹாட்டீன்மேல் கத்தரிப்பூ நிற ஹாட்டீன்
அரைமணி நேரத்தில்
மூன்று கூடை
இதயங்கள் சேர்ந்துவிட்டன
இப்படியே போய்க்கொண்டிருந்தால்
இதற்கு என்னதான் முடிவு?
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம்
எப்போதுதான் கலப்பது?
5.7.2022
காலை 10.18
மனுஷ்ய புத்திரன்

link